Tuesday, February 10, 2009

போலி உமரும் - உளறல்களும்...(பாதி)


ஏகாதிபத்தியவாதிகளின்
கண்மூடித்தனமான தாக்குதல், பயங்கரவாதிகளின் உண்மைக்குப் புறம்பான கோயபல்ஸ் பிரச்சாரங்கள் என இன்று உலகில் இஸ்லாமிய சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம்.

இருப்பினும் முஸ்லிம்கள் பின்பற்றும் வாழ்க்கை நெறியான இஸ்லாமே இன்று உலகில் மக்கள் நம்பிக்கையுடனும் ஆர்வமுடன் அலையலையாக திரண்டு வந்து ஏற்றுக் கொள்ளப்படும் மார்க்கமாக உள்ளது.

இதனைக் கண்டு மனம் பொறுக்கமுடியாத, "பொய்களின் கலவையான கிறிஸ்தவத்தைப்" பரப்புவதைத் தொழிலாகக் கொண்டு இயங்குபவர்கள், தங்களின் கோயபல்ஸ்தனத்தை இதிலும் காட்டத் துணிகின்றனர்.

அதில் ஒருவகையான மனோவியாதிக்கு அடிமையாகிவிட்ட உமர் என்பவரின் சமீபத்திய உளறல் ஒன்றை படிக்க நேர்ந்தது.

"உலகின் பல பாகங்களில் இஸ்லாம் வேகமாக பரவுவதை" முஸ்லிம்கள், "இஸ்லாம் தான் சிறந்த மார்க்கம் என்பதற்கான ஆதாரமாகக் காட்டுகிறார்களாம். அது தவறாம்".

ஒரே கேள்வி:

அவ்வாறு முஸ்லிம்கள் எங்கே கூறுகின்றனர்? என்று கேட்டு விட்டாலே கோயபல்ஸ் உமரின் அயோக்கியத்தனம் கழண்டு விழுந்து விடும்.

வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருள் என்று முஸ்லிம்கள் கூறாத ஒன்றை தானே உருவாக்கி, அதற்குத் தானே பதில் கூறி திருப்திபட்டுக் கொள்ளும் இவரைக் கண்டுகொள்ளாமல் விடுவது தான் சிறந்தது என்றாலும் இல்லாத ஒரு குற்றச்சாட்டை "பொய்களின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் தூதர்கள் பரப்பும் பொழுது "அவ்வாறு இல்லை" என்று கூற வேண்டிய கடமை முஸ்லிம்களுக்கு உருவாகிறது.

பொதுவாக தமக்குத் தெரிந்த செய்திகளை பிறரிடம் பங்கு போடுவதே மனிதனுக்கும் மிருகத்துக்கும் இடையிலான வித்தியாசங்களுள் முக்கியமான ஒன்று. இதில் தனது அறிவின்மையை அடுத்தவர்களிடம் பங்கு போடுவதன் மூலம் தானும் கெட்டு பிறரையும் கெடுப்பவனை சமூகம் எப்படி சகித்துக் கொள்கின்றதோ தெரியவில்லை. "பொய்யின் கூடாரமான" கிறிஸ்தவத்தின் பாதகாவலாராக இருப்பதிலிருந்தே இந்த உமரை எடைபோட்டு இவர்களுடைய சிந்தனைகளையும் எடைபோட்டு விடலாம்.

குறிப்பிட்டுச் சொல்லும்படியான சில தகவல்களை வாதம் என்று திரித்து, இது தவிர இஸ்லாத்தில் வேறு வாதமே இல்லை என்பது போல தனது உரையை பதிந்திருக்கின்றார்.

அகிலங்களைப் படைத்து பரிபாலிக்கக் கூடிய இறைவன் ஒவ்வொரு காலகட்டங்களிலும் மனித சமூகத்தின் மேன்மைக்காக பல தூதுவர்களையும் வேதங்களையும் அனுப்பி வைத்தி்ருக்கின்றான். அந்தந்த காலகட்டங்களில் அந்தந்த சமூகத்துக்குத் தேவையான சட்டதிட்டங்களை வகுத்து - வேதங்களாக தொகுத்து தந்திருக்கின்றான். அத்தூதுவர்கள் அனைவரும் அந்தந்த சமுதாயத்தில் அந்தந்த மொழியில் பேசக்கூடியவர்களாகவும் அதற்கு எந்த கூலி வாங்காதவர்களாகவும் இருந்தார்கள்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஈஸா-ஏசு (அலை) அவர்களையும் இஸ்ரவேல் சமுதாயத்துக்குத் தனது தூதுவராக நியமித்தான். பிறப்பிலேயே அதிசயங்களைக் கொண்டிருந்த அந்துத் தூதுவரை இஸ்ரவேல் சமூகம் தூதுவராக ஏற்றுக்கொண்டதோ இல்லையோ, ஏசுவைப் பின்பற்றுவதாகக் கூறிக் கொண்ட கிறிஸ்தவர்கள் என்று அறியப்படும் சமூகம் அவரைக் கடவுளாக ஆக்கிவிட்டது.

இப்படி இறைவன் தனது தூதர்களில் இறுதித் தூதராக எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது (ஸல்) அவர்களை அரேபிய நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கின்றான். முன்னர் குறிப்பிடப்பட்ட தூதர்களுக்கும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்பது அவர்கள் இறுதித் தூதர் என்பதும் எல்லா சமூகத்தவர்களுக்கும் பொதுவானவர் என்பதும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதம் இறைவனால் பாதுகாக்கப்படும் என்பதும் தான். தொலைத் தொடர்புகள் பன்மொழிப் புலமைகள் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில் இதை அறிவு பூர்வமாக புரிந்துகொள்வது மிக சுலபம்.

சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் முஹம்மது (ஸல்) என்பவர் உலகின் கடைசி தூதுவராக வந்து தனக்கு முன்னர் வந்தத் தூதுவர்களை மெய்ப்பித்து அவர்களுடைய வேதங்களையும் குறிப்பிட்டார்கள். ஆனால் கிறிஸ்தவர்களோ தங்களுக்குத் தூதவராக அனுப்பப்பெற்ற மர்யமின் குமாரனாகிய ஏசுவைப் பின்னாட்களில் கடவுளாக ஆக்கியது ஒருபக்கம். யூதர்கள் அந்த தூதரைப் பொய்ப்பித்து அவரைக் கொலை செய்து விட்டதாக மார்தட்டுவது மறுபக்கம்.

அன்னை மர்யம் அவர்களைக் களங்கப்படுத்தி யூதர்கள் கூறிவரும் அவதூறுகளை 2000 ஆண்டுகள் தாண்டி இன்றளவும் பதில்சொல்ல முடியாமல், அவர்களுடன் கைகோர்த்து தம் பொது எதிரியாக கருதும் முஸ்லிம்கள் மீது அவதூறு சொல்வதிலேயே இன்பம் காணும் கிறிஸ்தவர்களை, இறைவனின் உத்தரவாதமின்மையாலும் மனிதக் கையாடல்களாலும் கலப்படமாகியிருக்கும் பைபிளிலிருந்தே மூச்சிரைக்க ஓடி ஒளியச்செய்யும் ஆதாரங்களை முஸ்லிம்கள் தந்துவருகின்றனர். கேள்விகளையும் தொடுத்தவண்ணமுள்ளனர்.

அதைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் தான் சாகவில்லை என்று காண்பிப்பதற்காக மக்கள் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள் எனும் விதத்திலுள்ள புரட்டுகளை சமூகத்தில் பரவவிட்டு இஸ்லாத்தை அழித்து விடலாம் எனப் பகல் கனவு காண்கின்றனர்.

அதில் ஒன்றுதான் நாம் மேற்சொன்ன 'வேகமாக வளர்ந்தால் அது உண்மையானதாக இருப்பதாக பொருளா?' என்ற வாதமும்.

இதை இஸ்லாம் சிறந்தது என்பதற்கான ஆதாரமாக இஸ்லாம் எங்கே கூறுகின்றது என்று கேட்டால் இருந்த இடத்திலேயே விழுந்துவிடுவார்கள். அதைத் புரிந்து கொண்டுதான் தனது உளறல்களில் இஸ்லாமியர்கள் சொல்லும் ஒரு 'ஆதாரம்' என்று நழுவிக்கொள்கின்றார்.

உண்மை என்னவென்றால் இஸ்லாமியர்கள் இதை இஸ்லாத்தின் ஆதாரமாக வைக்கமாட்டார்கள் என்பது இவருக்கே நன்றாகத் தெரியும். அதனால்தான் தனது அதிபயங்கர புத்திசாலித்தனத்தை? வைரஸ் என்றும் எய்ட்ஸ் என்றும் திசை திருப்புகின்றார்.

எந்த அளவுக்கு என்றால் உலக அழிவு நெருங்க நெருங்க இஸ்லாமியர்கள் குறைந்து வருவார்கள் என்றும் அல்லாஹ் என்ற நாமம் கூறும் மக்கள் இல்லாமல் போவார்கள் என்றும் கலாச்சார, மத, வெறி சீரழிவு ஏற்படும் என்பதை இறைவன் திருக்குர்ஆனில் முன்னறிவிப்பாக சொல்லியுள்ளதை இவர்கள் தெரியாதவர்கள் ஒன்றும் அல்ல!

இப்படி இஸ்லாமியர்களைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடும் ஒருநாள் வரும் என்று நம்பும் முஸ்லிம்கள் 'வேகமாக வளருவது இஸ்லாம் சிறந்தது என்பதற்கான ஆதாரம்' என்ற அதற்கு மாற்றமான கருத்தை எப்படி சொல்வார்கள் என்பதை இவர்கள் சிந்திக்கவே மாட்டார்கள். நன்றாகத் தெரிந்து வைத்ததைச் சிந்திக்க வேண்டியதில்லை என்பதுதான் காரணம்.

ஆக உலகில் யாரேனும் ஒருவர் அல்லது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஒரே குரலில் 'இஸ்லாம் வேகமாக வளருகின்றது' என்று சொல்வார்களாயின் அது தங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சியான செய்தியை உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்துவதேயன்றி வேறில்லை.

உலகில் வாழ்ந்து மறைந்த பல அதி மேதாவிகள் இஸ்லாத்தையும் முஹம்மது நபியவர்களையும் புகழ்ந்து பேசி மறைந்தார்கள். (அவர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை)

இந்த மேதாவிகள் எவருமே வாய்திறக்காமலிருந்தால் இஸ்லாத்தின் புகழ் இல்லாமலாகிவிடுமா? இல்லை! அதே மேதாவிகள் அனைவரும் இஸ்லாத்திற்கு எதிராக கருத்து கூறியிருந்தாலும் கூட இஸ்லாம் உண்மையான மார்க்கம் தான் என்பதில் முஸ்லிம்களுக்கு எந்த ஐயமும் இருக்காது.

தொன்று தொட்டு இன்று வரை சாமானியர்கள் உட்பட உலகப் பிரபலங்கள் பலரும் இஸ்லாம் மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாகக் ஏற்றுக்கொண்டு வருகின்றார்களே, இவர்களைப்பற்றிய செய்திகளை முஸ்லிம்கள் பிறரிடம் பரிமாறத் தவறுவதில்லை. அதற்காக, இந்தப் பிரபலங்கள் இஸ்லாத்தில் இணைவதுதான் இஸ்லாத்தின் ஆதாரமாக யாரும் குறிப்பிடமாட்டார்கள். இந்தப் பிரபலங்கள் முஸ்லிம்களாக மாறாவிட்டாலும் இஸ்லாம்தான் உண்மையான இறை மார்க்கம் என்பதுதான் முஸ்லிம்களின் நம்பிக்கையாக உள்ளது.
மீதி....இன்ஷா அல்லாஹ் விரைவில்

1 comment:

Anonymous said...

சார் அந்த உமர் ஒரு ஈ அடிச்சான் காப்பி, ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்த்துட்டு வியாக்கியானம் பேசுவான். அவனை சுத்தி ஒரு ஜால்ரா கூட்டம் இருக்கிறதால் அவனுக்கு பெரிய அறிவு,ஜீவின்னு நினைப்பு.he is a waste fellow, good for nothing.

அமீர்.