Saturday, February 21, 2009

இஸ்லாம் என்றால் பாம்புக்கடி?! (மீதி)

ஆக... தனது ஞான சூனியத்தால் அப்பாவி கிறிஸ்தவர்களை ஏமாற்றிவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் இவருக்கு அரபு ஞானம் உள்ளதா? என்பதை பற்றி தெளிவாகத் தெரிந்து கொள்ள வேறு எங்கும் செல்லவேண்டிய தேவை இல்லை. இவரது கட்டுரைகளில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் இஸ்லாமிய அறிஞர்கள், மற்றும் தலைவர்களின் நூற்களை (அரபு பெயர்களை) எப்படி உச்சரித்திருக்கின்றார் என்பதைப் பார்த்தாலே இவரது ஆகாசப்புழுகு ஒழுகி வருவதை காணலாம்.

இவர் எழுதியது : காலிஃபா

சரியானது : ஃகலீஃபா அல்லது கலீஃபா

இவர் எழுதியது : அலி பின் அபி தலிப்

சரியானது : அலீ பின் அபீ தாலிப்

இவர் எழுதியது : இபின் மஸூத்

சரியானது : இப்னு மஸ்ஊத்

இவர் எழுதியது : டபரி

சரியானது : தப்ரி

இவர் எழுதியது : அபி பின் கப்

சரியானது : உபை இப்னு கஅப்

இவர் எழுதியது : இபின் கதிர் அல்பிஜி

சரியானது : இப்னு கஃதீர் - அல் பஸ்ஸீ

மேற்கண்டவைகள் சாம்பிள் மட்டும்...

இப்போது தெரிந்திருக்குமே இவரது அரபுப் புலமை......? பெயர்களைக் கூட உச்சரிக்கத் தெரியாத வர் அரபுப் புலமை பற்றி பேசுகின்றார். யாரை ஏமாற்ற இப்படி குதிக்கின்றார் என்று தெரியவில்லை. போகட்டும்! கிறிஸ்தவத்தில் இப்படி அண்டப்புழுகு அடிக்கவேண்டும் என்றுதான் சொல்லித்தருகின்றார்களா? இறைவனை குஷிப்படுத்த பொய் சொல்லவேண்டும் என்று சொல்லித்தரும் புரோகிதர்களின் மதமல்லவா அது!

இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அமைதி என்ற பொருள் இல்லையாம்(?!) அதன் வேர்ச்சொல் சலாமா என்பதாம்! அதன் பொருள் பாம்பின் கடி! அல்லது தோல் பதனிடுதல்! இது இவரின் கண்டு பிடிப்பு.

தன் கூற்றில் உண்மையாளராக இருந்தால் இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட அகராதியின் எந்த பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் நிருபிக்க வேண்டும்.

இஸ்லாம் என்ற வார்த்தைக்கு பாம்புக்கடி என்று விளக்கம் அளித்தது கடலை குடல் என்று சொல்வதற்குச் சமமாகும். உலகியல் சித்தாந்தங்களும் மதங்களும் அதன் ஸ்தாபகர்களின் பெயரால் அல்லது இடத்தின் பெயரால் அல்லது அந்த குறிப்பிட்ட சித்தாந்தத்தின் பெயரோடு மட்டும் ஒதுங்கி நிற்கும் போது இறைவன் மக்களுக்காகத் தேர்ந்தெடுத்து பெயரிட்ட இஸ்லாம் என்ற வாழ்க்கை நெறி மட்டுமே அதன் பெயரிலேயே சாந்தி என்ற பொருளைத் தாங்கி நிற்பது அதன் தனித்தன்மையாகும்.

இத்தகைய தனித்தன்மைகளிலிருந்து பாரதூரத்தில் ஒதுங்கி நிற்கும் கிறிஸ்தவம் என்ற பெயரை எடுத்துக் கொள்வோம். இதன் பொருள் என்ன? கிறிஸ்து என்ற பெயரை மட்டுமே தாங்கி நிற்பதல்லாமல் அதற்கு ஏதேனும் சொல்லத்தக்க வரலாற்றுப் பின்னணி உள்ளதா? இப்பெயர் இறைவனால் வழங்கப்பட்டதா? ஆதி மனிதர் முதல் மானிட வர்க்கம் பின்பற்றி வரும் இறை கோட்பாடு கிறிஸ்தவம் என்ற பெயரால் தான் அழைக்கப்படுகிறதா? இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட மதம் கிறிஸ்தவம் என்று ஒரு பைபிள் வசனத்தையேனும் இவரால் காட்ட இயலுமா?

//'இஸ்லாம்' மற்றும் 'சலாம்' என்ற இரண்டு வார்த்தைகள் ஒன்றுக்கு ஒன்று சம்மந்தமில்லாத வார்த்தைகளாகும் மற்றும் இவ்விரண்டு வார்த்தைகள் பெயரிலோ அல்லது பொருளிலோ கூட சம்மந்தப்பட்டவைகள் அல்ல.//

முதலில் சலாம் என்பதற்கும் இஸ்லாம் என்பதற்கும் சம்மந்தமில்லை என்று கூறினார். பின்னர் சலாம் என்பதற்கு பாம்பின் கடி என்று அர்த்தம் பொருள் உண்டு; எனவே இஸ்லாமுக்கு அவ்வாறும் பொருள் கூறலாம் என்று முன்னுக்குப் பின் முரண்பட்டு உளறி வைத்துள்ளார். இப்படிப்பட்ட வாதங்களிலிருந்தே இவர் விமர்சனம் செய்வது எந்த நோக்கத்தில் என்று புரிகிறதல்லவா?

அடுத்து கூறுகிறார்.

//'சலாமா' என்ற வார்த்தையிலிருந்து 'இஸ்லாம்' என்ற வார்த்தை உருவாகியது, இஸ்லாம் என்றால் 'சரணடைதல்' என்றுப் பொருள். //

//முகமது அவர்கள் சுற்றியுள்ள நாடுகளின் அரசர்களுக்கும், தலைவர்களுக்கும் இஸ்லாமையும், தன் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்ளும் படியாகவும், தான் அல்லாவின் தூதர் என்பதை நம்பும்படியும் அவர்களுக்கு கடிதம் மூலமாக அழைப்பு விடுத்தார்கள். அவர் தன் கடிதங்களை இப்படி முடிப்பார், "அஸ்லிம் தஸ்லம்! (Asllim Taslam)". இந்த இரண்டு வார்த்தைகளும் "அமைதி" என்ற பொருள் வரும் "சலாமா" என்ற ஒரே வேர்ச்சொல்லிலிருது வந்திருந்தாலும், இந்த இரண்டு வார்த்தைகளில் ஒரு வார்த்தைக்காகிலும் "அமைதி" என்ற பொருள் இல்லை. இந்த இரு வார்த்தைகளின் பொருள் "சரணடை மற்றும் நீ பாதுகாப்பாக இருப்பாய்", அல்லது வேறு வார்த்தையில் சொல்லவேண்டுமானால், "சரணடை அல்லது மரணமடை" என்று பொருளாகும். ஆக, தன் மதத்திற்கு சரணடைய மறுக்கும் மக்களை, கொன்று விடுவேன் என்று பயமுறுத்தும் மதத்தில் "அமைதி" என்ற பொருளுக்கு இடமேது? (So where is the meaning of 'Peace' in such a religion that threatens to kill other people if they don't submit to it?)//

சரணடைதல் என்ற வார்த்தையை எவ்வாறெல்லாம் தன் மனம் போன போக்கில் திரித்து வைத்துள்ளார் பாருங்கள்! இதற்கு ஓட்டை விழுந்த தன் மூளையில் உதித்த சிந்தனைகள் தவிர வேறு ஏதேனும் ஆதாரம் இவரிடம் உள்ளதா?

இஸ்லாமுக்கு அமைதி என்று பொருள் இருப்பது போல் கட்டுப்படுதல் அல்லது சரணடைதல் என்ற பொருள் இருக்கவே செய்கிறது. இதனை யாரும் மறுக்கவில்லை. ஆனால் யாருக்கு சரணடைவது? என்பதுதான் கேள்வி!

இது குறித்து இஸ்லாமிய ஆதாரங்கள் கூறுவது என்ன?

அல்லாஹ்வின் மார்க்கம் அல்லாத(வேறு மார்க்கத்)தையா அவர்கள் தேடுகிறார்கள்? வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவை அனைத்தும் விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும். (திருக்குர்ஆன் 3:83)

மேற்கண்ட வசனத்தை மட்டும் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். இவ்வசனத்தில் சரணடைகின்றன என்பதைக் கூறும் அரபி வார்த்தை 'அஸ்லம' என்பதாகும். படைப்பினங்கள் அனைத்தும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இறைவனுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும். இல்லையேல் என்னவாகும்? இதை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் இவர் கூட உயிர் வாழ முடியாது! இன்னும் சொல்லப் போனால் இவரது உடலின் உள் உறுப்புகள் கூட இறைகட்டளைப்படியே இயங்கிக் கொண்டிருக்கின்றன!

இவரது விளக்கப்படி இதை அடக்கு முறை என்று கூறினால்? உதாரணமாக இவர் சாப்பிடுகிறார்; உணவு உள்ளே சென்றதும் செரிமான உறுப்புகள் வேலை செய்கின்றன; அதனால் தான் இவரால் ஒழுங்காக இயங்க முடிகிறது. செரிமான உறுப்புகள் நாங்கள் எங்கள் விருப்பப்படி நடப்போம் இறைவனுக்குக் கட்டுப்பட மாட்டோம் என்று அடம்பிடித்தால்? ஆக இறைவனுக்குக் கட்டுப்படுவதையும் அடக்குமுறையையும் போட்டு தனக்குத்தானே குழம்பிப்போயுள்ளார்.

மேலும் பின்வரும் வசனம் இறைதூதர் இப்ராஹீம் (ஆபிரஹாம்) அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் இறைவன் கூறியதாக அருளப்பட்து :

இன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; ''(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்'' என்று சொன்னபோது அவர், ''அகிலங்களின் இறைவனுக்கு (முற்றிலும் வழிபட்டோனாகச்) சரணடைந்தேன்'' என்று கூறினார். (2:131)

மேற்கண்ட வசனத்துக்கு கிறிஸ்தவர் கூறியது போல இறைவன் தன் அடியார் ஆபிரஹாமின் மீது அடக்குமுறையைக் கையாண்டான் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது தன் அடியாரைப் பரிசுத்தப் படுத்தி அவரைத் தேர்ந்தெடுத்து அவர் மீது தன் அருளை இறக்கினான் என்று ஏற்றுக் கொள்வதா?

இவரது வாதப்படி இது அடக்கு முறை எனில் தார்மீக சமூகத்துக்கு இவர் வழங்கும் வழிகாட்டுதல்கள் என்னென்ன?

குடிப்பது குடிகாரனின் விருப்பம். குடிக்கக் கூடாது என்பது இறைவனின் கட்டளை. இக்கட்டளையை, மனிதர்கள் மீது இறைவன் செய்யும் அடக்கு முறை என்று இவர் கூறுவாரா?

இவரது கொள்கையைப் பின்பற்றித்தான் இன்று மேற்கத்திய நாடுகளில் புரையோடிப் போயிருக்கும் கேடுகெட்ட கலாச்சாரமான ஓரினப் புணர்ச்சி, விபச்சாரம், தந்தை மகன் தாய் மகள் ஒன்றிணைந்து மது அருந்துதல், நீலப்படம் பார்த்தல், அரை நிர்வாணம் ஆகியவை இறைவனின் அடக்குமுறை(?!)க்கு எதிரான தனி மனித சுதந்திரங்களாக தலைவிரித்து ஆடுகின்றனவே. //மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வருவதற்கு// என்று அந்நாடுகளை இவர் குறிப்பிட்டிருப்பதும் இவரது உள்ளத்தில் இத்தகைய எண்ணங்கள் இருப்பதைத் தானே காட்டுகிறது.

இவர் கூறியது போன்று இதனை அடக்கு முறை என்று எடுத்துக் கொண்டால் குடி, விபச்சாரம், சிலை வணக்கம், பன்றி மாமிசம் உண்ணுதல் போன்றவை விலக்கப்பட்டது என்று பைபிள் கூறுவதையும் அடக்கு முறை என்று கூறலாமே?

அப்படி நினைத்ததால்தான் கிறிஸ்தவர்கள் கர்த்தரின் கட்டளைக்கு மாற்றமாக மது அருந்தி வருகின்றனரோ?

அப்படி நினைத்ததால்தான் கிறிஸ்தவர்கள் கர்த்தரின் கட்டளைக்கு மாற்றமாக பன்றியைத் தின்று வருகின்றனரோ?

அப்படி நினைத்ததால் தான் மாற்றப்படக் கூடாது என்று கர்த்தரும் அவரது கட்டளைப் படி இயேசுவும் உபதேசித்து வந்த நியாயப்பபிரமாணத்தை பவுல் மாற்றினாரோ?

அப்படி நினைத்ததால் தான் விருத்தசேதனம் செய்யாதவன் தன் ஜனங்களில் இராதபடி அறுப்புண்டு போவான் என்று கர்த்தர் கூறிய பின்னரும் அது தேவையில்லை என்று பவுல் மாற்றிக் கூறினாரோ?

இதனால் தான் விக்கிரக ஆராதனை கூடாது என்று பைபிளில் கட்டளையிருந்தும் இயேசு, மேரி போன்றோரின் உருவச் சிலைகளை வைத்து கிறிஸ்தவர்கள் வணங்குகின்றனரோ?

ஆக தனது கூற்றில் இவர் உண்மையாளராக இருந்தால் அல்லது இவரை நம்பும் புரோகிதர்களுக்கு இதில் அதீத நம்பிக்கை இருந்தால் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

அடுத்தது அஸ்லிம் தஸ்லம்!

பிற நாட்டு தலைவர்களுக்கும் மன்னர்களுக்கும் நபி (ஸல்) அவர்கள் கடிதம் எழுதும்போது முடிவில் இவ்வாறு குறிப்பிடுவார்களாம்!. இதையும் எந்த ஆதாரமும் இல்லாமல் வெறுமெனே குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிட்டது போல் எந்த கடிதத்தில் அவர்கள் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள் என்ற அக்கடிதத்தின் அரபி மூலத்துடன் பதிவு செய்ய வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்துக்கும் அனுப்பப்பட்ட இறுதி இறைதூதர்! அவர்களின் தூதுத்துவப் பணியின் ஒரு பகுதியே மன்னர்களுக்கு அவர்கள் அனுப்பிய கடிதங்கள். மன்னர்களும் தலைவர்களும் மக்களின் பிரதிநிதிகள்! எனவே அவர்களுக்கு அனுப்ப வேண்டியது அவர்களின் தூதுத்துவத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அவ்வாறு அனுப்பும் போது இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு வெற்றி ஈடேற்றம் உண்டு என்று குறிப்பிட்டு மறுமை வெற்றியை அவர்கள் காரணமாகக் காட்டிய கடிதங்களின் வார்த்தைகளைப் பிரித்தெடுத்து தன் மனம் போன போக்குக்கு திரித்து வியாக்கியானம் செய்துள்ளார்.

சில மன்னர்களுக்கு அவர்கள் எச்சரிக்கைக் கடிதங்களையும் அனுப்பியுள்ளார்கள் என்பது உண்மையே! யார் அந்த மன்னர்கள்? நபி (ஸல்) அவர்கள் அனுப்பிய அனைத்துக் கடிதங்களிலும் இந்த எச்சரிக்கை காணப்பட்டால் கிறிஸ்தவரின் வாதப்படி அதை அடக்கு முறை என்று கூறலாம். மாறாக இஸ்லாமிய சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் பகிரங்கமாக யுத்தப் பிரகடனமும் நடத்திய மன்னர்களுக்கு அவர்கள் விடுத்த எச்சரிக்கையை மட்டும் பிய்த்து எடுத்து திரிபுவாதம் செய்வது காழ்ப்புணர்ச்சி மட்டுமே!

ஆக பாம்புகடி என்று கூறவந்தவர்.....

படைத்தவனை மட்டுமே வணங்க வேண்டும்! படைப்பினங்களை வணங்கக் கூடாது என்பதை பாம்புகடி என்று சொல்ல வருகின்றார்....

வட்டி வாங்கக்கூடாது என்பதை பாம்புகடி என்று சொல்ல வருகின்றார்....

விபச்சாரம் செய்யக்கூடாது என்பதை பாம்புகடி என்று சொல்ல வருகின்றார்....

மது அருந்தக்கூடாது என்பதை பாம்புகடி என்று சொல்ல வருகின்றார்....

பிறர் சொத்துக்களை அபகரிக்கக் கூடாது என்பதை பாம்புகடி என்று சொல்ல வருகின்றார்....

பயங்கரவாதத்தை எதிர்ப்பது பாம்புகடி என்று சொல்ல வருகின்றார்....

குறிப்பாக ஈஸா (ஏசு) அவர்கள் பின்பற்றிய மார்க்கம் கூட பாம்புகடி என்றுதான் வாதிடுகின்றார்.

பாவம்... இவர் கொடுத்த ஆடு மாடு கோழி ஒன்றை பாம்பு கடித்திருக்க; கும்பசாரத்திற்குப்பின் சமைத்து வைத்திருந்ததைச் சாப்பிட்டிருப்பார்போலும்... விஷம் தலைக்கு ஏறிவிட்டிருக்கின்றது.


அடுத்து வருவது.....

போலி உமர் நாம் சொன்னவாறே உளறிக்கொட்டியிருக்கின்றார். அத்தனையும் உளறல்கள். சம்பந்தமில்லாத கரகரக்குரல்கள்.

அவர் தனது உளறலை பாகம் ஒன்று என பதிந்திருப்பதால்; அத்தனை பாகங்களையும் அவர் வெளியிட்டபின் அதில் உளறியுள்ளவை பற்றியும் அண்டப்புழுகுகளையும் எடுத்துக்காட்டுவோம் இன்ஷா அல்லாஹ்.