Wednesday, November 25, 2009

மூட நம்பிக்கையின் சிகரங்கள்!

விலங்கினங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டது ஐந்தறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் பகுத்தறிவு என்று கூறப்படுகிறது. ஒரு பொருளை பார்த்தால் விலங்கினங்களால் அது என்ன என்பதை மிகத் துல்லியமாக தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் மனிதனோ அதற்கு சக்தி பெற்றவனாக இருக்கின்றான். உதாரணமாக ஒரு வேப்பமரத்து இலையை கண்களால் காணக்கூடிய மனிதன், அதனுடைய தன்மையை உடனடியாக புரிந்து கொள்கிறான். ஆனால் அதன் அருகில் வந்து முகர்ந்து பார்த்து அல்லது நாவால் சுவைத்து பார்த்து தான் ஒரு ஆடு அதன் தன்மையை புரிந்து கொள்கிறது. இதனால் ஆட்டிற்கு இல்லாத அதிகபட்ச அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனும் முடிவுக்கு மனிதன் வருகிறான். அது தான் பகுத்தறிவு எனப்படுகிறது.

பழைய சோறு குடிக்கும் ஊர்மக்கள்

விலங்குகளை விட மரம் செடி, கொடிகளை விட தனக்கு அதிக பலம் இருக்கிறது எனக் கூறிக்கொள்ளும் மனிதன், தன்னை விட அறிவில், ஆற்றலில் குறைந்த விலங்கினங்களும் மரம், செடி, கொடிகளும் தன்னுடைய தேவையை நிவர்த்தி செய்யுமென்று நம்புகின்றான். அவைகள் மனிதனது பிற்காலத்தை தெரிந்து வைத்திருப்பதாக நம்புகின்றான். குறிப்பிட்ட ஒரு பொருளால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அது செய்வதாக நம்புவது மூடநம்பிக்கை எனப்படும்.

இந்த மூடநம்பிக்கைக்கு படித்தவன், பாமரன், ஆண், பெண் என் பேதமில்லாமல் பெரும்பாலானோர் அடியையாகி விடுவதை நம்மால் காண முடிகின்றது.

வீடு வீடாக பிச்சை எடுக்கும் மக்கள்

இந்த மூடநம்பிக்கைகள் பல வகைப்பட்டதாக இருந்தாலும் மழை வேண்டி செய்யும் கேலிக் கூத்துகள் தமிழகத்தில் தற்போது மிக அதிகரித்து வருகிறது.

மழையை தருவது இறைவனின் செயல் என்பதை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் குறிப்பிட்ட காலங்களில் பருவமழை பொய்த்துவிடும் போது எப்படியாவது மழை வந்து விடாதா என மனிதன் துடிக்கின்றான். அதன் விளைவாக மூட நம்பிக்கைகளில் மூழ்கி விடுகின்றான். ஒவ்வாரு இடங்களிலும் மழை வேண்டி நடத்தப்பட்ட கூத்துகள் வேடிக்கையாகவும் விநோதமாகவும் இருக்கின்றன.

அரசுக்கும் வேம்புக்கும் திருமணம்

மழை வேண்டி சின்னகவுண்டன் பாளையத்தில், வீடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழைய சோறு மற்றும் கஞ்சிகளை பெரிய அண்டாக்களில் ஊற்றி கரைத்து குடித்துவிட்டு வாத்தியங்கள் முழங்க, ஊரின் முக்கிய வீதிகளில் முறம், சீவக்கட்டையுடன் ஊர்வலமாக சென்ற பொதுமக்கள் ஒப்பாரி வைத்து 'எங்களது ஊரில் மழை பெய்யவில்லை, ஊரை விட்டு வெளியே செல்வதை தடுக்க, மழை பெய்ய வேண்டும் வருண பகவானே!' என்று கூறியபடி ஊரின் எல்லையில் உள்ள மரத்தில் முறம், சீவக்கட்டை, கூடையை கட்டிவிட்டு திரும்பினார். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் எனறு இவர்கள் நம்புகிறார்கள்.

சிவகாசி அருகே ஆனைக்கூட்டம் என்ற இடத்தில் ஊர்மக்கள் ஒவ்வொரு வீடாக சென்று பிச்சை எடுத்தார்களாம். அவ்வாறு செய்தால் மழை வருமென்று இவர்கள் நம்புகின்றனர்.

தவளைக்கு கல்யாணம்

இன்னும் சில இடங்களில் அரசமரத்திற்கும் வேப்பமரத்திற்கும் திருமணத்தை நடத்தி வைத்தனர். இப்படி ஒரு வழிபாடு நடத்துவதற்காகவே வேம்பு மற்றும் அரச மரத்தை அருகருகே வளர்த்து வருகின்றனர். இவ்விரண்டு மரங்களுக்கும் திருமணம் செய்து வைத்தால் மழை வந்து விடும் என்பது ஒரு சில கிராமத்தார்களின் நம்பிக்கை.

தவளைகளுக்கு திருமணம் செய்வதென்பது வருடந்தோறும் தவறாமல் நடைபெறும் ஒரு கூத்து. இதனால் மழை வரும் என்று நம்புகிறார்கள். ஊர் கூடி, தாரை தப்பட்டை முழங்க வலம் வந்து தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பவர்களுக்கு தம் கைகளில் இருப்பது ஆணும் பெண்ணும் தானா? அல்லது இரண்டும் ஆணா? அல்லது பெண்ணா என்பது கூட தெரியாது என்பது தான் வேடிக்கை.

கழுதைக்கு கல்யாணம்

தவளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதை போலவே சில இடங்களில் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. பல இடங்களில் இரண்டு கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தாலும் சில இடங்களில் மனிதனுக்கும் கழுதைக்கும் கல்யாணம் செய்து வைக்கப்படுகிறது. ஊரார் முன்னிலையில் தாலி கட்டும் அந்த ஆண்மகனுடன் கழுதையை சீர் செனத்தி கொடுத்து அனுப்பி வைப்பார்கள். அந்த கழுதையை மன்னிக்கவும்! மணப்பெண்ணை தன்னுடன் அழைத்து செல்லும் மணமகன், அதனுடன் குடும்பம் நடத்துவாரா என்பது அவருக்கே வெளிச்சம்! இத்தகைய அருவருப்பான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் சில இடங்களில் அனைத்து மதத்தினரும் ஒரே இடத்தில் அமர்ந்து மழைக்காக தங்கள் தங்கள் தெய்வங்களை வழிபட்டு பிரார்த்தனை புரிகின்றனர். இதில் இஸ்லாமியர்களும் அடக்கம்.

மனிதன் கல்வியில் எத்தகைய வளர்ச்சியை கண்டாலும் அவனிடத்தில் இருக்கக்கூடிய மூட பழக்க வழக்கங்களை ஒழிக்க முடியவில்லை. மனிதனுக்கு எத்தகைய உதவிகளையும் செய்ய இயலாத குரங்குகள், பாம்புகள் போன்றவற்றை தெய்வமாக வழிபடுகின்றான். ஆனால் அதே பாம்புகளை பிடித்து விற்று பணம் சம்பாதிக்கின்றது இன்னொரு கூட்டம்.

மழை வேண்டி பிரார்த்தனை செய்யும் சர்வ மதத்தினர்

ஆந்திர மாநிலம் கரீம் நகரில் உள்ள ஒரு கோவிலில் எமதர்மன் சிலை ஒன்று உள்ளது. தெலுங்கு கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் எமதர்மன் பூமிக்கு இறங்கி வருவதாகவும் அன்றைய நாட்களில் அவரை வழிபட்டால் ஆயுள் நீட்டிப்பு தருவார் என்பதும் மக்களின் (மூட) நம்பிக்கை. இதனால் பல பகுதிகளிலிருந்தும் ஆயுள் விருத்திக்காக பலரும் இங்கு வருகின்றனர். அவ்வாறு மராட்டியத்திலிருந்து ஆயுள் நீட்டிப்பு வழிபாடு நடத்த வந்தவர்கள் மீது லாரி மோதி காரில் இருந்த 8 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள். இந்த சம்பவம் அவர்களது நம்பிக்கையின் படி எமதர்மன் பூமிக்கு இறங்கி வரும்போது தான் நடந்துள்ளது. தன்னை வணங்க வந்தவர்களையே எமதர்மன் கொன்றிருக்கிறான். இவ்வாறான சம்பவங்கள் நம் கண்களுக்கு முன்னால் நடந்தும் கூட மூடத்தனத்திலிருந்து விலகமறுப்பவர்களை என்னவென்று சொல்வது?

பாம்புகளை வணங்கும் மக்கள்

மனிதன் அறிவியலில் முன்னேறி சாதனை படைத்துவிட்டான், மிக விரைவில் சந்திரனில் குடியேறிவிடுவான் என கூறிக்கொண்டிருக்கும் நிலையிலும் மூடப்பழக்கங்களை ஒழிக்கமுடியவில்லை.

அறிவை சூனியமாக்கும் மூடநம்பிக்கைகளை மனிதன் கைவிட்டு பகுத்து ஆய்ந்து செயல்படுவானானால் விலங்கினங்களுக்கும் மனிதனுக்குமுள்ள வேறுபாடு புலப்படும். இஸ்லாமியர்கள் இத்தகைய பழக்கங்களில் ஈடுபடுவதில்லை என்பது சற்று நிம்மதி தரும் விஷயமாகும்.

விற்பனைக்காக கடத்தப்பட்ட பாம்புகள்

மழை வேண்டுபவர்கள் இறைத்தூதர் காட்டிய வழியில் மழைத்தொழுகை தொழுதால் இறைவன் நாடினால் மழையை தருவான் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. முஸ்லிம்கள் மழைக்காக அதை மட்டுமே செய்ய வேண்டும்.

ஆக, கழுதை, தவளை, பாம்பு, பல்லிகளை வணங்குவதாலோ கல்யாணம் செய்து வைப்பதாலோ மழை வந்துவிடப் போவதில்லை. தமிழகத்தில் மட்டுமே இத்தகைய பழக்கங்கள் இருக்கின்றன. உலகின் பிற பகுதிகளில் வறட்சி ஏற்படுகின்றன, மழை பெய்கின்றன. ஆனால் அங்கு மூடத்தனங்கள் இல்லை. எனவே பகுத்தறிவு பெற்ற நாம் அறிவார்ந்த செயல்களை செய்வோமே!

நன்றி : உணர்வு

Friday, November 20, 2009

அடையாளங்களை அழித்த அரிதாரம்...!

படத்தின் மீது க்ளிக் செய்து பெரிதாகப் பார்க்கவும்.






Thursday, November 12, 2009

தீவிரவாத இந்து அமைப்பை தடை செய்ய வேண்டும்!

கோவா கிராம பஞ்சாயத்து தீர்மானம்

மார்கோவா, நவ 12-_ சனாதன் சான்ஸ்தா எனும் தீவிரவாத இந்து அமைப்பை தங்கள் கிரா-மத்தில் செயல்பட அனு-மதிக்க கூடாது என்றும் அதனை தடை செய்ய-வேண்டும் என்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பன்டேரா கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சனாதன் சான்ஸ்தா-வின் ஆசிரமம் அமைந்-துள்ள ராம்நத்தியையும் உள்ளடக்கிய இந்த கிரா-மப் பஞ்சாயத்து, மார்-கோவா குண்டு வெடிப்-பைத் தொடர்ந்து, சனா-தன் சான்ஸ்தாவை தடை செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் சனாதான் சான்ஸ்தாவின் ஆசிரமம் அமைக்கப்பட்டது.


கடந்த அக்டேபர் 16ஆம் தேதி கோவாவின் வணிகத் தலைநகரான மார்கோவாவில் நடை-பெற்ற குண்டு வெடிப்-பில் சனாதன் சான்ஸ்தா உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். காவல்-துறையின் விசாரணை-யில், அந்த இருவரும் வெடிகுண்டை வாகனத்-தில் எடுத்துச் செல்லும்-போது வழியிலேயே குண்டு வெடித்துவிட்ட-தாக அறியப்பட்டது.


இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழ-மையன்று நடைபெற்ற பன்டேரா கிராமப் பஞ்-சாயத்து கூட்டத்தில், சனாதன் சான்ஸ்தாவுக்கு எதிராக கிராம மக்கள் கடும் கோபத்துடன் பேசினர். இதனை அடுத்து சனாதன் சான்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


சனாதன் சான்ஸ்-தாவை தடை செய்வது-டன், ஆசிரமத்தின் நட-வடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்-மானம் நிறைவேற்றப்-பட்டுள்ளதாக பன்டேரா கிராமப் பஞ்சாயத்தின் செயலாளர் திவாகர் சலேகர் கூறியுள்ளார்.

நன்றி : விடுதலை

Monday, November 9, 2009

நடிகைகளுக்கு சேலை கட்டுவோம்!

மகளிர் அமைப்பு எச்சரிக்கை

கடந்த வாரம் சர்வதேச மனித உரிமை அமைப்பின் மகளிர் அணியினர் சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 400 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் சினிமாவில் ஆபாச உடைகளை அணிவதை எதிர்த்தும் இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெறுவதை கண்டித்தும் குரலகள் எழுப்பப்பட்டன.

ஆபாச போஸ்டர்களுக்கு தார் பூசும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

ஒரு பக்கம் குடும்பத்தின் குத்துவிளக்காக சொல்லப்படும் பெண்களெல்லாம் சீரியலில் மூழ்கி அழுது வடிந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்தியாவின் தூண்களான இளைஞர்களோ, நடிகைகளுக்கு கோவில் கட்டுவதையும் அவர்களின் பிறந்தநாளுக்கு ஆரத்தி எடுப்பதையும் வழக்கமாக்கி கொண்டிருக்க இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாகவே இருந்தது.

கால்கடுக்க காத்து நின்று அதுவும் ஒரு மாதிரியான படமென்றால் யாரும் பார்த்து விடக் கூடாதே என மறைந்து மறைந்து படம் பார்த்த காலம் போய் இன்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என்னை நீ பார்த்தே ஆக வேண்டும் என மிரட்டுவது போல் வரவேற்பறையில் வந்து விழுகின்றன நடிகைகளின் ஆபாச காட்சிகள். காந்தி ஜெயந்தி முதல் குடியரசு தினம் வரை நடிகைகளின் சிறப்பு பேட்டிகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. துவக்க காலங்களில் சினிமா நடிகைகளை விபச்சாரிகளை போல கருதியதால் பெண்கள் நடிக்க செல்வதை அவமானமாகக் கருதினர். எனவே 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை பெயிண்ட் அடித்து தாவணி சுற்றி இளமை தோற்றத்தில் நடிக்க வைத்தனர்.

மனித உரிமை கழகத்தின் மகளிர் பிரிவு சென்னையில் நடத்திய ஆபாசத்திற்கெதிரான ஆர்ப்பாட்டம்

ஆனால் இன்று சினிமா என்பது குறைந்த நேரத்தில் அதிக லாபத்தை ஈட்டித் தரும் லாபகரமான தொழில் என்பதாலும் நடிகைகளுக்கு பண முதலீடு எதுவும் தேவையில்லை என்பதாலும் இளம் நடிகைகளும் நடிக்க புறப்பட்டு விட்டனர். அதன் காரணமாக போட்டி ஏற்பட்டு, ஆடைகளை எவ்வளவுக்கெவ்வளவு குறைக்கிறார்களோ அந்த அளவுக்கு கிராக்கியும் ஏற்படுகிறது. அதை தடுக்க வேண்டிய தணிக்கை துறையும் அதை கண்டு கொள்ளாததால் சபலிஸ்டுகளுக்கு கொண்டாட்டமாகி போய்விட்டது. தொலைக்காட்சியில் அரைகுறை ஆடையுடன் வரும் இந்த நடிகையை தந்தை, தாய், மகன், மகள் என அனைவரும் ஒன்றாக இருந்து ரசிப்பது தான் இதில் வேதனைக்குரிய விஷயம். தன் மனைவியும் மகளும் ஒழுக்கமாக நடக்க வேண்டும் என எண்ணும் ஒருவன் கூட தான் ரசிக்க, ஒழுக்கக் கேடான பெண்கள் வேண்டுமென்றே விரும்புகிறான். இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் மகளிர் அணியினர் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் அவசியமான ஒன்றாகும்.

முஸ்லிம்கள் அணியும் ஃபர்தாவை ஆணாதிக்கம் என்றும் ஆடைக்குறைப்பை பெண் சுதந்திரம் என்றும் கூறும் போலி பெண்ணுரிமை வாதிகளுக்கு மத்தியில் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டே ஆகவேண்டும் என்பதே காண்போரின் கூற்றாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய மனித உரிமை ஆணையத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பாளர் கல்பனா அவர்கள், 'சினிமாவில் ஆபாசமாக நடிப்பது எல்லை மீறிவிட்டது. எப்படியும் ஆடை அணியலாம் என நடிகைகள் நினைத்து மிகவும் கவர்ச்சியாக உடைகள் உடுத்தி நடிக்கின்றனர். இது கலாசார சீரழிவை ஏற்படுத்தும்' என்று கடுமையாக சாடினார். நடிகைகளின் ஆபாசம், தனியார் டிவி சேனல்களில் ஒளிபரப்பப் படுவதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கிறது. இப்போதைய சினிமாக்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் இடம் பெறுகிறது. இதை சென்சார் குழு எப்படி அனுமதிக்கிறது? என்றும் கல்பனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது வரவேற்க தகுந்த விஷயம். ஏனெனில் தன்னுடைய தேவைக்காக திருடக்கூடிய ஒருவன் எத்தகைய தீங்கையும் செய்ய முற்படுவான். அப்படிப்பட்டவனைக் கூட அவன் அகப்பட்டால் தான் அவனை தண்டிக்க முடியும். ஆனால் தணிக்கை துறையின் செயல் அப்படிப்பட்டதல்ல. ஒரு தீமை மக்களுக்கு செல்வதற்கு முன்பாகவே தடுத்திட முடியும். எனவே இது தணிக்கை துறையின் குற்;றமே! பணத்திற்காக எத்தகைய கீழ்த்தரமான கேரக்டர்களிலும் நடிக்க நடிகைகள் தயங்குவதில்லை. ஆனால் அது மக்களை சென்றடைந்து விடாமல் பாதுகாப்பது அதாவது தடுத்து நிறுத்துவது தணிக்கை துறையின் கடமையாகும்.

'கீழ்த்தரமாக, ஆபாசமாக ஆடை அணிந்தும் விரசக்காட்சிகளிலும் நடிக்கும் நடிகைகளுக்கு வெட்கம், மானம் இருந்தால் (அதுவெல்லாம் அவர்களுக்கு உண்டு என கல்பனா நினைக்கிறார் போலும்!) இனி அவ்வாறு நடிக்கக் கூடாது. ஆபாசமாகவே உடையணியும் நடிகைகளுக்கு சேலை கட்டும் போராட்டத்திலும் ஈடுபட உள்ளோம். தொடர்ந்து அப்படியே நடித்தால் ஷூட்டிங் நடக்கும் இடத்தை முற்றுகையிடுவோம்' என்றும் கல்பனா தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடக்குமானால் அது தணிக்கை துறைக்குத் தான் அவமானம். அனைத்து மகளிர் அமைப்பினரும் ஒன்றிணைந்து நடிகைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்குவதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் தணிக்கை துறையையும் முற்றுகையிட வேண்டும். மக்களுக்கு கேடுவிளைவிக்கக் கூடிய எதையும் யாரும் செய்துவிட முடியும் எனில் தணிக்கை துறை என்பது எதற்காக? அனைத்து துறைகளிலும் ஆய்வு நடத்தும் லஞ்ச ஒழிப்பு துறை ஏன் தணிக்கை துறையை ஆய்வு செய்யவில்லை என்ற கேள்விகள் எழுந்து காலங்கள் பலவாயிற்று. அவ்வாறு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு கறுப்பாடுகள் களையப்படும் போதுதான் ஆபாசங்கள் கட்டுக்குள் வரும். சமுதாயமும் சீர் பெறும்.

நன்றி : உணர்வு