Sunday, October 4, 2009

திரை கூத்தாடிகளின் பார்வையில் திருமணம்!

'எள்ளு காயுறது எண்ணெய்க்கு, எலிப்புளுக்கை எதுக்கு காயுது' என்று தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல திருமணத்தை பற்றி குடும்ப அங்கத்தினர் கருத்து சொன்னாலும் விமர்சனம் செய்தாலும் நாம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் திருமணம் என்பது என்ன? ஒழுக்கமான குடும்பம் என்பது என்ன? என்று தெரியாத சினிமா கூத்தாடிகள் இன்று திருமணத்தை பற்றி பேசுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

திருமணங்கள் தோல்வியில் முடிகின்றனவாம். எனவே திருமணங்கள் தேவையில்லை என்று தொலைக்காட்சி ஒன்றுக்கு கமலஹாசன் பேட்டியளித்துள்ளார். அவருக்கு திருமணம் தேவையில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அல்லது அவரைப்போன்ற திரைக்குடும்பத்தினருக்கு மட்டும் அதை சொல்லி இருந்திருக்கலாம். ஆனால் பொது தொலைக்காட்சியில் கூற அவருக்கு எந்த தகுதியுமில்லை. ஆனால் இதற்கு பதில் கூறியுள்ளார் இன்னொரு கூத்தாடியான மனோரமா. திருமணம் என்பது தேவை. திருமணம் செய்யாமலிருந்தால் கமலுக்கு ஸ்ருதி கிடைத்திருப்பாரா? எனக்கு பூபதி கிடைத்திருப்பானா? என்றெல்லாம் மனோரமா அறிவுபூர்வமான(!?) கேள்வியை கேட்டுள்ளார். திருமணம் செய்யாமலும் குழந்தை பெற முடியும் என்று இவருக்கு தெரியவில்லையோ! விருப்பம் போல நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். ஹோட்டல்களில் தங்கும் போது என் மகளிடம் உனது தாய் யார் என்றும் என்னிடம் உனது மனைவி யார் என்றும் கேட்டதால் தான் நான் சரிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளேன். அதன்றி எனது மகளுக்கும் சரிகாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கமல் கூறியதற்கும் மனோரமாவின் பதிலிற்கும் எந்த சம்பந்தமுமில்லை. நாற்றமெடுக்கும் சாக்கடையை கிளறி நம் கையையும் நாறடித்துவிடாமல் விஷயத்திற்கு வருவோம்.

மனோரமாவின் இந்த பதிலால் எவருக்கும் லாப நஷ்டங்கள் இல்லை. ஆனால் சந்தடி சாக்கில் அவர் இன்னொரு கருத்தையும் விதைக்கப் பார்க்கிறார். திருமணத்திற்கு முன் மணமக்கள் தாங்கள் குழந்தை பேறுபெறும் தகுதியுடையவர்கள் தானா என்று மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டுமாம். அத்துடன் மணமகன் இல்லறத்தில் ஈடுபடும் தகுதி பெற்றவன் தானா என்பது பற்றியும் சான்றிதழ் பெற வேண்டுமாம். அதை சட்டமாக்க முயற்சி செய்ய போகிறாராம். அதற்கு அவர் கூறும் காரணத்தை கேட்டு நம்மால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. குழந்தையின்மை தான் பெரும்பாலான விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றனவாம். அத்துடன் ஆண்மை குறைவு, எயிட்ஸ் போன்ற காரணங்களினால் பெண்கள் பிற ஆண்களிடம் தொடர்பு கொள்கிறார்களாம். கணவர்கள் கொலை செய்யப்படவும் இதுதான் காரணமாம்.

அவரது கூற்றுப்படி ஆணோ பெண்ணோ மருத்துவரிடம் போலி சான்றிதழ் வாங்கி வந்தால் மனோரமாவின் பதிலென்ன?

மனோரமாவின் குற்றச்சாட்டுப்படி தனது மகனுக்கு திருமணம் நடப்பதற்காக ஆண்மை குறைவை மறைக்கும் பெற்றோர் இதை செய்ய மாட்டார்களா?

திருமணத்திற்கு பின் ஏற்படும் தவறான தொடர்பால் எயிட்ஸ் வந்தால் அதற்கு மனோரமாவின் பதில் என்ன?

கணவனால் அல்லது மனைவியால் குழந்தை பெற முடியவில்லையாயின் அவர்கள் விவாகரத்து செய்வதில் என்ன தவறு இருக்க போகிறது. ஆரம்பத்தில் குழந்தையில்லாத தம்பதிகள் 10 வருடங்களுக்கு பின் குழந்தை பாக்கியம் பெறவில்லையா? அடுத்ததாக இல்லற வாழ்க்கைக்கு தகுதியுள்ளவர்கள் தானா என்பதை திருமணத்திற்கு முன்பே ஒரு டிரையல் எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் சொன்னாலும் சொல்வார்கள் போல் தெரிகிறது.

மகளும் தந்தையும் தங்கையும் தனயனும் குளியலறை மற்றும் படுக்கையறை காட்சிகளில் கட்டிப்புரண்டு எவ்வித வெட்கமின்றி வேறுபாடுமின்றி கூச்சமின்றி பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆபாசத்தை விதைப்பது தான் சினிமா. மருமகனான தனுஷ் ஆடிப்பாடி சல்லாபம் செய்த ஸ்ரேயா என்ற நடிகையுடன் அவரது மாமனாரான ரஜினி அடுத்த படத்தில் காம களியாட்டம் போடுகிறார். ஆபாச சந்தையின் புதிய வரவான கமலுடைய மகள் ஸ்ருதி, என்னுடைய தந்தையுடன் நான் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளாராம். இது தான் சினிமா. இவர்கள் தங்களுடைய சதை வியாபாரத்தை மட்டும் பார்த்துக் கொண்டு போவதால் யாருக்கும் தொந்தரவில்லை. ஆனால் திருமணம் போன்ற குடும்ப விவகாரங்களில் ஈடுபடும்போது தான் நம்மை முகம் சுளிக்க வைக்கின்றது.

நாளொரு நங்கையும் பொழுதொரு மங்கையுமாய் இருந்து விட்டு குழந்தைக்காக மட்டும் திருமணம் செய்யும் திரைக்குடும்பத்தினரை போல மனோரமா மற்றவர்களையும் கருதிவிட்டார் போலும். திருமணம் என்பது குழந்தை பேறு, தாம்பத்தியம் மட்டுமல்ல, அதனுடன் அன்பு, நட்பு, ஆதரவு, பாதுகாப்பு என இன்னும் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. இவையெல்லாம் காசுக்காக அன்பு செலுத்தும் நடிகர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.

கமலாக இருந்தாலும் மனோரமாவாக இருந்தாலும் தான் வாழ்வது நிழல் வாழ்க்கை என்பதை உணர்ந்து நிஜ வாழ்க்கையின் யதார்த்தங்களை புரிந்து கொண்டு பேசுவது அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் நல்லது.

ஒரு பெண்ணுக்கு மருத்துவம் செய்தும் தனது கணவனால் தனக்கு குழந்தை பாக்கியம் தர முடியாது எனில் அவள் தாராளமாக வேறு திருமணம் செய்வதை இஸ்லாம் அனுமதித்து அப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல ஆணுக்கும் பொதுவானது எனக் கூறும் இஸ்லாம், தனிமனித ஒழுக்கத்தை கற்றுக் கொடுக்கிறது. பிற மதங்கள் கொசுக்களை விரட்டும் பொழுது இஸ்லாம் சாக்கடையையே அகற்ற சொல்கிறது. அதாவது விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று சொல்கிறது. எயிட்ஸை ஒழிக்க இதைவிட ஒரு தீர்வு உண்டா?

முற்போக்குவாதி என்று தன்னைக் கூறிக் கொண்டு கற்காலத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கும் கமலும் குழந்தை பெறும் இயந்திரமாக பெண்களை கருதும் மனோரமாவும் இஸ்லாத்தை சற்று படிப்பார்களானால் இஸ்லாத்தில் அனைத்திற்கும் தீர்வு உண்டு என்பதை புரிந்து கொள்வார்கள்.

நன்றி : உணர்வு

No comments: