இந்திய சுதந்தர தினமானாலும் சரி, குடியரசு தினமானாலும் சரி, அல்லது இந்துக்களின் எந்த பண்டிகைகளானாலும் சரி, கொண்டாட்டத்தைக் குலைக்க முஸ்லிம் தீவிரவாதிகள் சதி; குண்டு வைக்க முயற்சி என்று பத்திரிகை - தொலைக்காட்சிகளில் கூறி ஊடகவியலாளர்கள் தங்களை அரிப்பை தணித்துக் கொள்வர்; அதே போல, காவல்துறையும் தமது பங்கிற்கு சோதனைகள் என்ற பெயரில் பொய்யான பதட்டத்தை உருவாக்குவர்; இதனையெல்லாம் கேள்விப்படுகின்ற - பார்க்கின்ற பொதுமக்கள் மத்தியில் முஸ்லிம்கள் மேல் காழ்ப்புணர்ச்சியை உருவாக்குவதே இதன் நோக்கம்.
தீபாவளியை முன்னிட்டு குண்டு வைத்து அந்தப்பழியை முஸ்லிகளின் மேல் போடுவதற்காக, இந்தியாவின் மிகச்சிறிய மாநிலமான கோவாவில், கடந்த 16.10.1009 வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ஒரு ஸ்கூட்டரில் வெடிகுண்டுகளை எடுத்து வரும்போது, தவறுதலாக வெடித்து, ஒருவன் மெல்குந்தா பாடீல், இறந்து விட்டான்; மற்றொருவன் யோகேஷ் நாயக், பலமான காயங்களுடன் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இவர்கள் இருவரும் மாலேகன் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சத்வி ப்ரக்யா சிங் தாகூருக்கு மிக நெருக்கமானவர்கள். இந்த ஸ்கூட்டருக்குச் சொந்தக்காரன் வேறு யாருமில்லை; நிஷாத் பகாலே என்ற இந்துத்வ தீவிரவாதி; சனாதன் சவுன்ஸ்தா என்ற இந்துத்வ தீவிரவாத அமைப்பின் தீவிர உறுப்பினர்,. இந்த அமைப்பு, கோவாவில், பொண்டா என்ற பகுதியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றது.
சனநெரிசலுள்ள மார்கோ பகுதியில், கிரேஸ் சர்ச்சுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஹோண்டா இடர்னோ ஸ்கூட்டரில் தான் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. தீபாவளியை முன்னிட்டு, நரகாசுரனின் உருவ பொம்மையை எரித்து கொண்டாட்டங்கள் நடைபெறவிருந்த பகுதி தான் இது. தீபாவளிக் கொண்டாட்டத்தின் போது, இந்து மக்கள் மீது குண்டுகள் வைத்து தாக்குதல் நடத்தி, பழியை முஸ்லிம்கள் மேல் போடுவதற்காக செய்த சதிதான் இது என்பது திட்டவட்டமாக தெரிகின்றது.
கோவா உள்துறை அமைச்சர் ரவி நாயக் தெரிவிக்கையில், இந்துத்வ தீவிரவாத அமைப்பு சனாதன் சவுன்ஸ்தா வின் தொடர்பை உறுதிப்படுத்தினார். மேலும், அவ்வமைப்பின் தலைமையத்தில் சோதனை செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்துடைப்பாக விசாரணையை நடத்தாமல், இதில் ஈடுபட்ட இந்த அமைப்பினரும், இதற்கு தூண்டுகோலாக இருந்த மற்ற தீவிரவாத இந்துத்வ அமைபினரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். இந்துத்வவாதிகளின் இந்த இழிசெயலை நடுநிலை இந்து சமுதாய மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய மிகப்பெரும் பணியும் நமக்கு உள்ளது. இவற்றைக் கண்டாவது, கமல்ஹாசன் போன்ற அறிவிஜீவிகள் (?) தங்களது கருத்தை மாற்றிக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
நன்றி : உணர்வு
No comments:
Post a Comment